சென்னை,
சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீஷியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், லேப் டெக்னீஷியன்கள் அளித்துள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சில மருந்தகங்களில் ரத்த பரிசோதனை செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.