தமிழக செய்திகள்

நிர்வாகிகள் கூட்டம்

தென்காசி உள்பட 4மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது

தினத்தந்தி

விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின்  மண்டல நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மண்டல தலைவர் ரஹ்மத் நிஷா தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மதுரை மண்டல தலைவர் கதீஜா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மின்கம்பங்களை விரைவில் சீரமைக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பரிசு தொகையை வங்கி கணக்கு மூலம் வழங்கப்படுமா? அல்லது கடந்த காலங்களில் வழங்கியது போல் நேரில் வழங்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது, இதனை அரசு தெளிவு படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ராபியா, ஆபிதா பர்வீன், ரிஸ்வானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து