தமிழக செய்திகள்

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வள துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது