தமிழக செய்திகள்

மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு - யார் அவர்? போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிக்கப்பட்டிருந்தது. யார் அவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பழையனூர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உடலை கோணிப்பையில் கட்டி பாதி எரித்த நிலையில் பிணம் கிடந்தது. ஆணா? பெண்ணா என்று தெரியாத நிலையில் காணப்பட்டது. பின்னர் போலீசார் இறந்து கிடந்தது ஆண், 35 வயது இருக்கும் என்பதை உறுதி செய்தனர்.

வாலிபரை கொன்று உடலை காய்ந்து போன பனங்காய்கள் மீது வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்