தமிழக செய்திகள்

ஓட்டல் கழிவுநீர் குட்டையில் வாலிபர் பிணம்

கலசபாக்கம் அருகே ஓட்டல் கழிவுநீர் குட்டையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் குட்டையில் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கழிவுநீர் குட்டையில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மீண்டும் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்