தமிழக செய்திகள்

குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

காஞ்சாம்புறம் அருகே குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள பொய்யாக்குளம் தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது. நேற்று காலையில் அந்த குளத்தில் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜோனி என்பதும், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவருடைய மனைவி அனிதா போலீசில் புகார் கூறியிருந்தார். இந்தநிலையில் தான் ஜோனி பிணமாக மீட்கப்பட்டார்.

குளத்தில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து