தமிழக செய்திகள்

பாய்லர் ஆலை ஊழியர் பலி; மனைவி படுகாயம்

அம்மாப்பேட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் பாய்லர் ஆலை ஊழியர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். வேளாங்கண்ணிக்கு சென்றபோது இந்த விபத்து நடந்தது.

தினத்தந்தி

அம்மாப்பேட்டை:.

வேளாங்கண்ணிக்கு சென்றார்

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 38). இவர் திருச்சி பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை தனது மனைவியுடன் காரில் திருச்சியில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தார். காரை செல்வன் ஓட்டிச்சென்றார்.

டிப்பர் லாரி மோதி பலி

கார் தஞ்சை அருக அம்மாப்பேட்டையை அடுத்த கோவிலூர் பகுதியில் சென்றபோது எதிரே அம்மாப்பேட்டையில் இருந்து தஞ்சையை நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் செல்வனின் மனைவி படுகாயம் அடைந்தார்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி படுகாயம்

படுகாயம் அடைந்த செல்வனின் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு