தமிழக செய்திகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் காலை 9.05 மணிக்கு கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியை ஏற்றுகிறார். சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ரெயில் நிலைய வளாகம் மற்றும் தண்டவாள பகுதியில் சோதனையிட்டனர். அப்போது தண்டவாளம் அருகே பராமரிப்பு பணியில் பயன்படுத்தக்கூடிய இரும்பு கம்பிகள் மொத்தமாக கிடந்தன. அதனை போலீசார் அகற்றினர். தண்டவாளம் அருகே கம்பிகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது