சென்னை,
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி வாயிலாக பெண் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டலையடுத்து, குஷ்புவின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு சென்ற போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் குஷ்பூவின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை.வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளதையடுத்து, மிரட்டல் விடுத்தவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.