தமிழக செய்திகள்

எழும்பூர் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை

எழும்பூர் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள கென்னட் லைன் பகுதியில் இருக்கும், சிங்கப்பூர் பிளாசா கட்டிடத்தில் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடிக்கப்போகிறது என்றும், நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசி மிரட்டல் விடுத்தார்.

உடனடியாக அங்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போனில் பேசி மிரட்டிய நபரை எழும்பூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை