தமிழக செய்திகள்

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து