தமிழக செய்திகள்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருத்தணி அடுத்த நல்லாட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்கின்ற டென்னி (வயது 28) என்பவர் மாணவியை காதலிக்கது திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி வயிற்று வலி இருப்பதாகப் பெற்றோர்களிடம் கூறியதால், சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து மாணவி திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜராஜன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பன் அப்புன் மீது புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த 2 பேரையும் ஒரு வாரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜராஜன் (எ) டென்னியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அப்புனை போலீசார் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்