தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், இவர்களது 5 வயது சிறுவன் வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டான். பின்னர் கதவை திறக்க முடியாததால் கதறி அழுதுள்ளான். இதுகுறித்து கணேசனின் மனைவியும், உறவினர்களும் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலை தொடர்ந்து, விரைந்து வந்த தீயணப்புத் துறையினர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அந்த சிறுவனை மீட்டனர்.