தமிழக செய்திகள்

கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

உசிலம்பட்டி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் கரையாம்பட்டி என்னும் இடத்தில் உசிலம்பட்டியிலிருந்து சேடபட்டி செல்லும் இந்த சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது. இந்த உடைப்பு காரணமாக சாலையின் ஓரத்திலும் பெரிய அளவில் பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து சென்றனர்.இது குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலர்கள் குடிநீரை நிறுத்தி வைத்து உடைப்பை சரி செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு