தமிழக செய்திகள்

தோகைமலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

தோகைமலையில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து தோகைமலை வழியாக குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் குடிநீர் வீணாக சென்று வருகிறது.

இந்தநிலையில் குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தோகைமலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கி எதிரே உள்ள காய்கறி கடை அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக தண்ணீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்