தமிழக செய்திகள்

இனிப்பு கடையில் புகுந்து முந்திரி, பாதாம் திருட்டு - 4 வாலிபர்களுக்கு வலைவீச்சு

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் இனிப்பு கடையில் புகுந்து முந்திரி, பாதாம் திருடிய 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த மேடவாக்கம் தாம்பரம் பிரதான சாலை விஜயநகரம் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் அந்தோணி வினோத் (வயது 37). இவர் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். தரை தளத்தில் தமிழ்நாடு பாரம்பரிய உணவு பண்டங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் இவர், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு உறங்க சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது இரும்பு கதவின் பூட்டை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ஆயிரம் ரூபாய் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. பின்னர் கடையில் பாதுகாப்பிற்காக பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது 4 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ முந்திரி, 5 கிலோ திருநெல்வேலி இருட்டுகடை அல்வா, பாதாம், பால்கோவா உள்ளிட்ட பொருட்களை அள்ளிச்சென்றது பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் அந்தோனி வினோத் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்