தமிழக செய்திகள்

சேலையூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

சேலையூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள பதுவஞ்சேரி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி. இவர், வீட்டை பூட்டிவிட்டு திண்டிவனத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சலி தேவிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து