தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டுபோனது.

தினத்தந்தி

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள வடுகப்பட்டி, ரிவேரா கார்டனை தேர்ந்தவர் ராஜம்(வயது 62). இவர் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் ராஜம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான கடலூருக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு