தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பட்டேல் தெருவை சேர்ந்தவர் கிரிஜா (வயது 60). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தையும் திருடி சென்றனர். இது குறித்த திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT