தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள சந்திராபுரம், கவுதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63).

இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காஞ்சீபுரத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்