ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 54). இவரது தாயார் கிருஷ்ணவேணி டி.பி. மில் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் வீட்டின் பூட்டு உடைத்து கதவு திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.