தமிழக செய்திகள்

பேரம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பேரம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமம் மந்தவெளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நவீன் குமார் (வயது 40). மாநகர பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பிள்ளைகள் 2 பேரும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து