தமிழக செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

ராணிப்பேட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு கிராமத்தில் மலைமீது குமரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து வள்ளி, தெய்வானை கழுத்தில் இருந்த பவுன் மாங்கல்யம், 3 உண்டியல்களை உடைத்து சுமார் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற நிர்வாகிகள் பூட்டு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்