தமிழக செய்திகள்

அரசு குடியிருப்பில் புகுந்து அனல்மின் நிலைய அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

மீஞ்சூர் அடுத்த வல்லூர் அனல்மின் நிலைய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

தினத்தந்தி

அனல் மின்நிலைய அதிகாரி

மீஞ்சூர் அருகே வல்லூர் தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு துணை பொது மேலாளராக பணிபுரிந்து வருபவர் பழனிச்சாமி (வயது 56). இவரது மனைவி சாந்தா(48). பழனிச்சாமி வல்லூர் அனல்மின் நிலைய அதிகாரி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் சென்னை திருவான்மியூருக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை-பணம் திருட்டு

இதனை அடுத்து அவர் விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு குடியிருப்பில் புகுந்து அனல்மின் நிலைய அதிகாரி வீட்டில் கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து