ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி மதுராபுரி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). மில் தொழிலாளியான இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 5 பவுன் நகை, மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.