தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 13 பவுன் நகையை திருடி சென்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பாரேரி ஜீவா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 57), இவர் வீட்டை பூட்டிவிட்டு உடல்நிலை சரியில்லாத உறவினரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து குப்பன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்