தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பொன்னை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

பொன்னை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே கீரைச்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், சென்ட்ரிங் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை தீபா கூலி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் கார்த்திகேயன் வீட்டை பூட்டி விட்டு சென்ட்ரிங் கட்டுமான வேலைக்கு சென்றார். மதியம் 1 மணி அளவில் தீபா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தீபா கார்த்திகேயனிடம் கூறினார். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு பொன்னை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை