தமிழக செய்திகள்

தையல்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 4¼ பவுன் நகைகள் திருட்டு

தையல்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 4¼ பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

தென்னிலை அருகே சுண்டமேடு பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 45). இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று லதா தனது வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் லதாவின் வீடு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கோபி என்பவர் லதாவிற்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.அதன்பேரில் லதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு