தமிழக செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தினத்தந்தி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை அம்பராம்பாளையம் பகுதியில் நீரேற்றம் செய்து சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றனர். இதற்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு ஆழியாற்றில் இருந்துதான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. அந்த குடிநீர் சாலைகளில் தேங்குவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது