தமிழக செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

வெம்பக்கோட்டை அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

தினத்தந்தி

தாயில்பட்டி,

சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலயில் குழாய்கள் பழுது காரணமாக அடிக்கடி தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் வீணாக செல்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக வெம்பக்கோட்டை அருகே உள்ள வனமூர்த்திலிங்கபுரம் பஸ் நிறுத்தம், கணஞ்சாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகிலும் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது