தமிழக செய்திகள்

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை இன்று தொடக்கம்

ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 4 ஜி சேவையை தொடங்கிவைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். 4 ஜி' சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்த சேவை தொடர்பாக பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் எஸ்.பார்த்திபன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4 ஜி' சேவைகள் வழங்கப்படும். சர்வதேச சேவை கடமை நிதி உதவியுடன் 4 ஜி' சேவையை வழங்குவதற்கு தமிழ்நாட்டில் 620 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி அன்று ரூ.245 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும், வன பகுதிகளில் உள்ள 21 கிராமங்களிலும் 209 இடங்களில் 4 ஜி செல்போன் டவர்கள் நிறுவப்பட இருக்கின்றன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள செல்போன் டவர்கள் 4 ஜி' சேவை வழங்குவதற்கு தரம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 254 புதிய 4 ஜி' செல்போன் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறுவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை