சென்னை,
பி.எஸ்.என்.எல். நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல் 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இதற்காக நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியில் இருந்து பகல் 1 மணி வரை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். சென்னையில் பாரிமுனையில் பிரசாரம் நடைபெற உள்ளது. இதில் பி.எஸ்.என்.எல்.-ல் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.கே.மதிவாணன் தெரிவித்துள்ளார்.