தமிழக செய்திகள்

தமிழக பட்ஜெட் : அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். #TNBudget #Budget2018

தினத்தந்தி

சென்னை,

தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது:

மோசமான நிதிநிலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் - திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின்

நிதி மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது - திருமாவளவன்

அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட் - தமாகா தலைவர் வாசன்

பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தை திவாலுக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசின் பட்ஜெட்டில் எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கிய இந்த பட்ஜெட்டால் தமிழக கடன்சுமை மேலும் அதிகரிக்குமே தவிர, வளர்ச்சியடையாது - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது