தமிழக செய்திகள்

அறிவிப்பு பலகை வைக்காததால் விபத்து: பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து மெக்கானிக் பலி

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த காந்திநகர் காலனி-நந்தவனம்பட்டி சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

திண்டுக்கல்,

இதற்காக சாலையின் நடுவே 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் பணிகள் நடைபெறுவது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் நந்தவனப்பட்டி கருவூல காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கார் மெக்கானிக்கான இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த சங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரம் என்பதால் அவர் இறந்து கிடப்பதை யாரும் பார்க்கவில்லை.

நேற்று காலை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலம் கட்டும் பணி நடப்பது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்காததால் ஒரு உயிர்பலியாகி விட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்