சென்னை,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கட்டப்பட்டுள்ள 60 காவலர் குடியிருப்புகள் மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்காக கட்டப்பட்டுள்ள 6 மகளிர் காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 21 குடியிருப்புகள், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் 63 குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் 5 குடியிருப்புகள் என மொத்தம் 89 காவலர் குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் - பில்லூர் அணை மற்றும் வடக்கிபாளையம், திருப்பூர் மாவட்டம் - வேலம்பாளையம், தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், திருச்சி மாவட்டம் - ஜெம்புநாதபுரம், வேலூர் மாவட்டம் - அவளூர் மற்றும் ரத்தினகிரி, விழுப்புரம் மாவட்டம் - பெரியதச்சூர் ஆகிய இடங்களில் 8 காவல் நிலையக் கட்டிடங்கள் என மொத்தம், 25 கோடியே 18 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 155 காவலர் குடியிருப்புகள் மற்றும் 8 காவல் நிலைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.