மதுரை அவனியாபுரத்தில் நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. அவனியாபுரம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டுவண்டி என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், பெரிய மாட்டு வண்டி பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியானது, அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக நிலையூர் வரை சென்று திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியின் முடிவில், திருவாதவூர் கே.எல்.அம்பாள் மாடு முதலாவதாக வந்து முதல்பரிசு ரூ.60 ஆயிரத்தை வென்றது. பாண்டிகோவில் பாண்டிசாமி மாடு இரண்டாவதாக வந்து ரூ.50 ஆயிரத்தை வென்றது. அவனியாபுரம் நகைக்கடை முருகன் மாடு மூன்றாவதாக வந்து ரூ.40 ஆயிரம் பரிசு பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.40 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.30 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாட்டுவண்டி சங்கத்தினர் செய்திருந்தனர்.