தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தினத்தந்தி

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கையை அடுத்த பாகனேரி அருகே காடனேரியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காடனேரி-சொக்கநாதபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நல்லாங்குடி முத்தையா மற்றும் தெற்குபட்டி பிரேம் பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை நெற்புகப்பட்டி ரிதன்யா சதீஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி மற்றும் மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோர் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலூர் டைம்பாஸ் டீ ஸ்டால் வண்டியும், 2-வது பரிசை தளக்காவயல் சசிக்குமார் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி பிரதாப் வெள்ளையப்பத்தேவர் வண்டியும் பெற்றது.

பரிசு

இதேபோல் செங்குளிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கண்டுப்பட்டு-நடராஜபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 57 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை குமாரபட்டி விஷால்கண்ணன் வண்டியும், 2வது பரிசை அய்யம்பாளையம் கண்ணன் வண்டியும், 3-வது பரிசை மேப்பல் சக்தி ஆகியோர் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 41 வண்டிகள் கலந்து கொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை சாமியார்பட்டி மருது வண்டியும், 2-வது பரிசை சின்னமாங்குளம் அழகு வண்டியும், 3-வது பரிசை பதினெட்டாங்குடி நிகிலேஸ் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை திருவாதவூர் பாண்டித்துரை வண்டியும், 2-வது பரிசை அவனியாபுரம் முருகன் வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை சரவணன் ஆகியோர் வண்டியும் பெற்றது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு