தமிழக செய்திகள்

மதுரையில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் மாட்டுவண்டிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

பந்தயத்தின் போது பசு மாடு குறுக்கே வந்ததால், மாட்டு வண்டிகள் நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல மாட்டுவண்டிகள் பங்கேற்றன. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

பந்தயத்தின் போது பசு மாடு குறுக்கே வந்ததால், மாட்டு வண்டிகள் நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது. மாடுகள்  நிலைத்தடுமாறியதில், பின்னால் வந்த மாட்டு வண்டிகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சில மாட்டுவண்டிகள் உடைந்து சேதம் ஏற்பட்டது. நல்வாய்பாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால், அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் கானப்பட்டது.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்