தமிழக செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்

காளையார்கோவிலில் மாட்டுவண்டி பந்தயம் நடைபற்றது.

காளையார்கோவில், 

காளையார்கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புதுப்பட்டி இளையராஜா மற்றும் தேவாரம் ஈஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை பரவை சோனைமுத்து மற்றும் நைனார்பட்டி மூக்கையா வண்டியும், 3-வது பரிசை உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா மற்றும் சூசையப்பர்பட்டினம் ஜான்சந்தியாகு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை இளங்கிப்பட்டி அர்ச்சுணன் வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் வண்டியும், 3-வது பரிசை கடுகுசந்தை தவம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தமிழரசி, எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு