தமிழக செய்திகள்

காளையார்கோவில் அருகே மாட்டுவண்டி பந்தயம்

காளையார்கோவில் அருகே கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

பொங்கல் விழா

காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நகரம்பட்டி கிராமத்தில் உள்ள அழகியம்மன் கோவில் செவ்வாய் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நகரம்பட்டி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தெற்குப்பட்டியை சேர்ந்த பிரேம் மற்றும் கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும், 2-வது பரிசை புலிமலைப்பட்டி மடை கருப்பண சுவாமி மற்றும் முத்துப்பட்டி முனியாண்டி வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி வாளுக்குவேலி மற்றும் சின்னமனூர் வேதவர்சினி வண்டியும், 4-வது பரிசை புதுப்பட்டி மணி வண்டியும் பெற்றது.

சின்ன மாட்டு வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் 6 வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசை அப்பன்திருப்பதி ராகுல் வண்டியும், 2-வது பரிசை கிடாரிப்பட்டி பாண்டியராஜன் வண்டியும், 3-வது பரிசை கம்பம் பேச்சியம்மன் வண்டியும், 4-வது பரிசை வல்லாளப்பட்டி கற்காத்தா வண்டியும், 5-வது பரிசை உடன்குளம் முத்துநாச்சி வண்டியும், 6-வது பரிசை பாகனேரி பிரதாப்வெள்ளையன் வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் வண்டி சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்