தமிழக செய்திகள்

கருப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்

கருப்பூரில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு கருப்பூர் கே.சி.சி. அணியினர் சார்பில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. 90 மாட்டு வண்டிகள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, புதுபூட்டு ஆகிய 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட எல்லையை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதனை பொதுமக்கள் சாலையோரம் நின்று பார்த்து ரசித்தனர். இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு மொத்தம் சுமார் ரூ.2 லட்சம் வரை பணமும், கேடயமும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கான ஏற்பாடுகளை கருப்பூர் கே.சி.சி. அணியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்