தமிழக செய்திகள்

திருச்சுழி அருகே மாட்டுவண்டி பந்தயம்

திருச்சுழி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

திருச்சுழி அருகே கீழ்க்குடி கிராமத்தில் அமைந்துள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன.

பாதுகாப்பு பணி

இதில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகத்துடன் கண்டு களித்தனர். மேலும் ரேக்ளா பந்தயத்தை முன்னிட்டு திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்