தமிழக செய்திகள்

தபால் அலுவலகம் மீது பஸ் மோதல்; 10 பயணிகள் காயம்

பேட்டையில் தபால் அலுவலகம் மீது பஸ் மோதிய விபத்தில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.

பேட்டை:

நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. மணப்படைவீடு பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் (வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். நாஞ்சான்குளத்தை சேர்ந்த லாசர் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பேட்டை- சேரன்மாதேவி ரோடு பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்த 10-க்கு மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தின் போது 2 மோட்டார் சைக்கிள்களும், தபால் பெட்டியும் சேதம் அடைந்தது. பஸ்சில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்