தமிழக செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து; 15 பேர் படுகாயம்

கடலூரில் ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

பாகூர்,

கடலூரில் இருந்து ரெட்டிச்சாவடி நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று இன்று காலை 10 மணிக்கு சென்றது. கன்னியகோவில் அருகே வந்த ஷேர் ஆட்டோ மீது பின்னே வந்த அரசு பேருந்து உரசி உள்ளது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஆட்டோ கவிழ்ந்ததில் உள்ளே இருந்த பயணிகள் தூக்கி வெளியே வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்கள் சாலை ஓரம் விழுந்துகிடந்தனர். பின்னர் அவர்களை மீட்ட பொதுமக்கள் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிருமாம்பாக்கம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,

ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். தற்போது இவர்கள் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு