தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.

தினத்தந்தி

அன்னவாசல் அருகே மதியநல்லூர் எல்லையாப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விமல் (வயது 32). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் அன்னவாசலில் இருந்து எல்லையாபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அன்னவாசல் அம்மாதிடல் அருகே வந்தபோது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக விமல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட விமல் படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் விமலை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் பஸ் டிரைவர் இலுப்பூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பிராங்ளின் (46) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை