தமிழக செய்திகள்

பஸ்-லாரி மோதல்; 4 பேர் படுகாயம்

எட்டயபுரம் அருகே லாரி - அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே லாரி - அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ்

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகே வந்தபோது தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

4 பேர் படுகாயம்

அப்போது அந்த பஸ், லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் விஜயன் (வயது 49), கண்டக்டர் ரமேஷ் (47), பஸ்சில் இருந்த பயணிகள் படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மாடத்தி அம்மாள் (68), சோலையம்மாள் (65) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு