தமிழக செய்திகள்

சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து... ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

தண்ணீர் அதிகமாக இருப்பதாக கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்துக்கும் அதிகமாக மழைநீர் தேங்கியது. அப்போது நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பஸ், சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கியது. அந்த பஸ்சில் இருந்த சுமார் 70 பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிய பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். வள்ளியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி இருப்பதாவது:

"* சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூரப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்துடன் இயக்க வேண்டும்.

* பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.

* பணிமனையில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் ஏதும் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

* பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது , சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்."

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்