தமிழக செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு பற்றி பரிசீலனை செய்யப்படும்: ஓ. பன்னீர்செல்வம்

பேருந்து கட்டண உயர்வு பற்றி பரிசீலனை செய்யப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார். #OPS

தினத்தந்தி

தேனி,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தினை கடந்த 19ந்தேதி நள்ளிரவில் உயர்த்தி அறிவித்தது. இது அதற்கு அடுத்த நாள் முதல் அமலுக்கு வந்தது.

இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. அது குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இது தவிர்த்து சுங்க வரியாக ரூ.1 வசூலிக்கப்படும். இதனால் குறைந்தபட்ச தொகையான ரூ.5க்கு பதிலாக ரூ.6 வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில் கட்டண குறைப்பு பற்றி பரிசீலனை செய்யப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறியுள்ளார்.

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பேருந்து கட்டண குறைப்பு பற்றி அரசு பரிசீலனை செய்யும் என கூறினார். கோவை ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் பெயர் இடம்பெறாதது பற்றி எனக்கு கவலையில்லை என கூறினார்.

#OPS #Chennai #bus

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு