தமிழக செய்திகள்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பஸ், ரெயில்களை இயக்க வேண்டும் - வைகோ கோரிக்கை

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பஸ், ரெயில்களை இயக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்றது. மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தப்பட்டு, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழகத்தில் போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும். அரசு பஸ்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். செப்டம்பர் 1-ந்தேதி முதல் ரெயில்கள் ஓடுவதற்கும் ஆவண செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும். அதேவேளை சமூக விலகலைக் கடைபிடித்து பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை