சென்னை,
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் படி இன்று முதல் மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும்.
இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும்.
செப். 15ம் தேதி வரை பழைய ரூ.1,000 பஸ் பாஸ் செல்லுபடியாகும் என்றார்.